2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 
சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார அபிவிருத்தி சேவைகள தொடர்பிலான பயிற்சி இன்று சனிக்கிழமை(20) வை.எம்.சீ.ஏ அமைப்பின் சமூக அணித்திரட்டுனர் ஆர். சாருஜா தலைமையில்  ஏறாவூர் தளவாய்க் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது. 
இலங்கையிலுள்ள நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சிகள் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அமைப்பினால் மாவட்டமெங்கும் நடாத்தப்பட்டு வருகின்றன.
 
சிறுகைத்தொழில் செய்யும் பெண் முயற்சியாளர்களுக்கான வியாபாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்படுவதாக சாருஜா தெரிவித்தார்.
 
தளவாய்க் கிராமத்தில் இடம்பெற்ற இந்தப் பயிற்சி நெறியில் சுமார் 24 பெண்கள் பங்கு பற்றினர்.
 
பயிற்சியை முடித்துக் கொள்ளும் இந்தப் பெண்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான சகல வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் பெறுவதைத் தவிர்த்து குறைந்த வட்டியில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளினூடாக வெற்றிகரமான தொழில் முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிகாட்டல்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக அணித்திரட்டுனர் ஆர். சாருஜா மேலும் தெரிவித்தார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேவ் த சில்ரன் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றன.
 
வியாபார அபிவிருத்தி வளவாளர்களான Business Development Resource எஸ்.விக்னேஸ்வரன், ஆர்.புவனேந்திரன், ரீ.பி.ஆர்.அலோன்சன், என்.சிவநாதன்ஆகியோர் வியாபார அபிவிருத்தி ஆலோசனைகள் பற்றிய பயிற்சிகளை வழங்கினர்.

கிராம சேவகர் ரீ.ஜெயகாந்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜி.பிரின்ஸ், கள உத்தியோகத்தர் ரீ.சுபேந்திரன் ஆகியோரும் இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X