2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கிய வீடுகளை பார்வையிட்டார் அரியநேத்திரன் எம்.பி

George   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் காட்டு யானைகளினால் தேமாக்கப்பட்ட மூன்று வீடுகளை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த மூன்று வீடுகளையும் சனிக்கிழமை(20) இரவு, காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் கெவுளியாமடு கிராமத்தினுள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் கிராமத்திலுள்ள மூன்று வீடுகளை உடைத்துள்ளன.

அத்துடன், வீடுகளில் வைக்கபட்டிருந்த தானியங்கள் உட்பட  வீட்டுப்பாவனை பொருட்களையும், உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் கிராமத்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பா.அரியநேத்திரன் கெவுளியாமடு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அக்கிராமத்து மக்களிடமும் கலந்துரையாடியதுடன் சேதவிபரங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

காட்டு யானைகளின்; தாக்குதல் தொடர்பில் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர், மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் இப்பிரதேசத்தில் மிகவும் விரைவில் யானை பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன் யானையின் தாக்குதலிலிருந்து தப்பி ஓடும்போது ஒருவர் மரத்தல் மோதுண்டு,  சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X