2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வள்ளமும் வலைகளும் தீயில் எரிந்து நாசம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 அடி நீளமுடைய வள்ளமும் அவ்வள்ளத்திலிருந்த ஆழ்கடல் வலைகளும் ஞாயிற்றுக்கிழமை (21) தீயினால் எரிந்து நாசமாகியதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

25 இலட்சம் ரூபாய் பெறுமதியான வள்ளமும் வலைகளும் தீயினால் எரிந்ததாக ஏறாவூரைச் சேர்ந்த நெய்னா முஹம்மத் முஹம்மத் ஷபியாக் (வயது 50) என்பவர்  பொலிஸாரிடம் செய்த  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக தான்  சவுக்கடிக் கடலில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதுடன்,  தனக்கு இதுவரையில் எதிரிகள் எவரும் இல்லை.

கடந்த 2002.10.18 அன்றும் சவுக்கடியில்  தனது ஆறரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வள்ளமொன்றும் வலைகளும் தீயினால் எரிந்ததாக பாதிக்கப்பட்ட நபர் தனது    வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X