2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிற்றுண்டி விற்பனை நிலையம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் பெண் சுயதொழில் முயற்சியாளரின் சிற்றுண்டி  விற்பனை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை திறந்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் காத்தான்குடி சேர்மன் இப்றாகீம் வீதியில் மைநா உற்பத்திப் பொருள் விற்பனை  நிலையத்தை  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா திறந்து வைத்தார்.

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதற்காக   பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில், சுயதொழில் முயற்சியில் ஈடுபடுகின்ற  பெண்களின்   உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டுவருகின்றது.

 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X