2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுக்கூடம் மற்றும் பாடசாலை நூலகம் என்பன திங்கட்கிழமை(22) காலை திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வை இதனை திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஏ.ராஜேந்திரா மற்றும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.பதுர்தீன் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது புனரமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களும் திறந்து வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X