2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வூட்ட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது  தொடர்பில் பொதுமக்களுக்கு பல்வேறு மட்டங்களிலும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.கே.ஜி இகலவெல,  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர, குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, காத்தான்குடி ஹாதி நீதிபதியும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபையின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.இஸ்மாலெவ்வை,  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.எ.அஸீஸ்,  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அண்மையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிறுமியின் படுகொலைச் சம்பவம் உட்பட சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தும் ஆராயப்பட்டன.

பாடசாலை  மற்றும் கிராம மட்டங்களிலும் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் மூலமும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பால் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பெற்றோரை விழிப்புணர்வூட்டும்  நடவடிக்கை மேற்கொள்வதுடன், இது தொடர்பில் காத்தான்குடியிலுள்ள உலமாக்கள் ஜும்ஆ பிரசங்கங்களின்போதும் மக்களை விழிப்புணர்வூட்டுவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக   பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X