2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

க.பொ.த மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி வகுப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு. றெட்றிக் கழகம் மற்றும் யூனியன் அசூரன்ஸ் என்பவற்றின்   அனுசரணையில், வாகரை பிரதேசத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளில் க.பொ.த கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு இலவசமாக கணிதம், ஆங்கிலம், வரலாறு மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.

மட்.பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூனியன் அசூரன்ஸின் கிழக்கு வலய முகாமையாளர் ம.ஜெகவண்ணன், கிழக்கு வலய ஆள் இணைப்பு முகாமையாளர் ஏ.நிரோசன், செங்கலடிக் கிளையின் விற்பனை முகாமையாளர் ரி.ஜெயக்குமார், வாழைச்சேனைக் கிளையின் விற்பனை முகாமையாளர் யு.மனோபவன், மட்டக்களப்பு மாவட்ட றெட்றிக் கழக அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள் தொடக்கம் வெள்ளி வரை பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் மட்.பால்சேனை  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.

 வாகரைப் பிரதேசத்திலுள்ள 4 படசலைகளை சேர்ந்த கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 120 மாணவர்கள் நன்மையடைவுள்ளனர் என யூனியன் அசூரன்ஸின் கிழக்கு வலய முகாமையாளர் ம.ஜெகவண்ணன் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X