2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வந்தாறுமூலையைச் சேர்ந்த சின்னத்தம்பி சோமசேகரம்(வயது 82) என்ற முதியவர் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிள் மீது, இராணுவ வாகனம் இன்று (23) மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலையில் வந்தாறுமூலை அம்பலத்தடியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது மாவெடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X