2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யோகேஸ்வரன் எம்.பி. -மூன்றாளம்மடு கிராமவாசிகள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூன்றாளம்மடு கிராம மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட வீடுகள் இதுவரை புனரமைக்கப்படாமை, வீடு, குடிநீர், மின்சாரம் இல்லாப் பிரச்சினை, அறுவடை வெட்டும் இயந்திரம் உள்ளதால் வேளாண்மை வெட்டுபவர்களுக்கு தொழில் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு மக்கள் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் வவுணதீவு பிரதேச செயலக அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்,  மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட வீடுகள் புனரமைக்கப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும்  இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள், அமைச்சர்களின்  கவனத்துக்கு கொண்டுசெல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இக்கிராமத்தில் 56 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X