2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாதிரி வீட்டுத்தோட்டம் தொடர்பில் விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


இரசாயனமற்ற இயற்கை முறையில் மாதிரி வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தன் தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்கிழமை (23) கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

இதன்போது சேதனை முறையில் செய்யப்பட்ட பசளை மற்றும் மருந்துவகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவற்றிக்கான விளக்கமளிக்கப்பட்டன. மாதிரி வீட்டுத்தோட்டமும் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது தோட்டத்தில் மரக்கறி அறுவடையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், விவசாய போதனாசிரியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,  விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X