2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. வாவியில் பிடிக்கப்படும் மீன்களை நுகர்வதில் பிரச்சினை இல்லையென அறிவிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு வாவியில் பிடிக்கப்படும் மீன்களை நுகர்வதில் எவ்வித பிரச்சினைகளும் தற்போதைக்கு இல்லையென காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கிகள் மூலமாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவித்தலில்,
'மட்டக்களப்பு வாவியில் பிடிக்கப்படும் மீன்களை நுகரவேண்டாமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது என்று  பொதுமக்கள் மத்தியில் ஒரு செய்தி அண்மைக்காலமாக பரப்பப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், காத்தான்குடி வாவிக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகார் குறித்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின்  தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

இது குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரிகளுடனும் குறிப்பாக புற்றுநோயியல் வைத்திய நிபுணர்களுடனும் மட்டக்களப்பு சூழல் சுற்றாடல் அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு வினவியபோது இதில் எதுவித உண்மைத்தன்மையுமில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் வழமைபோன்று மட்டக்களப்பு வாவியில் பிடிக்கப்படும் மீன்களை நுகர்வதில் தற்போதைக்கு எவ்வித பிரச்சினைகளுமில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X