2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம். நூர்தீன்


மட்டக்களப்பு- கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரில் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதசாரி மீதும்  வீதியருகே இருந்த தொலைபேசிக் கம்பம் மற்றும் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் மோதி சேதமேற்படுத்தியுள்ளது.

விபத்தில் பாதசாரியான ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியைச் சேர்ந்த எம். ஹயாத்துமுஹம்மது (வயது 76) என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்தலததுக்கு விரைந்த ஏறாவூர் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X