2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண்முனை வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாண்டு  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய மீளாய்வுக்கூட்டம் (25) நேற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா மற்றும் முன்னாள் மகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கிராம சேவகர்கள், வாழ்வின் எழுச்சித்திட்ட அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள், பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள், வாழ்வின் எழுச்சித்திட்டம் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X