2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றங்களின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று (26) வெள்ளிக்கிழமை நீதியமைச்சுக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்,

கடந்த காலத்தில் ஒப்பந்த காரர்களினால் கைவிடப்பட்டிருந்த ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றக் கட்டடம் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றக் கட்டடங்கள் என்பன கட்டடங்கள் திணைக்களத்தினால் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாகின்றன.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் நிரந்தர நீதிமன்றமாக இயங்கவிருப்பதாகவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கட்டடத்தின் விஸ்தரிப்பு வேலைகளுக்காக, மிக விரைவில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்; போது  நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, உதவிச் செயலாளர் ஏ.கே.டீ.டீ.டீ.அரந்தர, அமைச்சின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.சல்மான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சரை சந்தித்த மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தூதுக் குழுவில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி விNனூபா இந்திரன், செயலாளர் சட்டத்தரணி ஆர். கண்ணன், சட்டத்தரணிகளான எஸ்.எம்.முஹம்மது அமீன், பி.பிரேம்நாத், எஸ்.சுலோஜன், கெ.நாராயணப் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X