2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின தொடர்பான ஊர்வலமும் நிகழ்வுகளும் எதிர்வரும் புதன்கிழமை (01) இடம் பெறவுள்ளது.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் முகமாக லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில், களுவாஞ்சிகுடி நாகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அமைப்பின் வளாகத்தில் முகாமையாளர்  திருமதி. ரஞ்சினி மதிதரன் தலைமையில் இவ்வூர்வலம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக ஊர்வல நிகழ்வுகள் மகிழூர்முனை சக்தி வித்தியாலயம், மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து  ஆரம்பமாகி பிரதான வீதியின் ஊடாக லெடர் ஒப் கோப் அமைப்பின் வளநிலையத்தை வந்தடைந்து மேடை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர்  கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் மற்றும் களுவாஞ்சிக்குடி வலயக்கல்விப் பணிப்பாளர்  திருமதி.என்.புள்ளநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X