2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பந்தனுக்கு தாயகத்தலைமகன் பட்டம் வழங்கி வைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன், தாயகத்தலைமகன் எனும் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி, இன்று (27) கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா வாழ்த்துப் பத்திரம் வாசித்து கிரீடத்தை சூட்டி இந்தப்பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் இதன் போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் வாழத்துப்பத்திரத்தையும், புதிய பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கத்துக்கான வாழத்துப்பத்திரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் வழங்கி வைத்தனர்.

இந்த வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், எஸ்.சரவணபவன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X