2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள மண்டபத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், தொழில் கல்வியை கற்பதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் இதுவரை 7612 தொழில் வழிகாட்டல் வகுப்புக்கள் நடாத்தியுள்ளதாக மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளர் எஸ். தியாகராஜா தெரிவித்தார்.

பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழைப்பெற்று தொழிலைப் பெறுவதற்கான ஆர்வம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக் கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்துறைத் தலைவர் கலாநிதி லோகேஸ்வரன், கடற்றொழில் மற்றும் கப்பலதுறை பொறியியல் கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் ரி. சுபராஜன் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக விலங்கியல் திணைக்களப் பேராசிரியர்
பி.வினோபா ஆகியோர் விளக்கமளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X