2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை பௌத்த தேசம் என்பதை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்: சுமந்திரன்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

இலங்கை பௌத்த தேசம் என்பதனையும் பௌத்த நாடு என்பதையும் நிரூபிப்பதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (28) பௌத்த பிக்குகள் 4 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து கொழும்பில் வலம் வரவிருக்கின்றனர்.

நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்ளவுள்ளமையை நாங்கள் தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு - கல்லடி துளசி மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டினை பௌத்த சிங்கள நாடு என உணர்த்தும் தேவை அரசுக்கு இன்று ஏற்பட்டிருகின்றது. நாட்டின் அரசுக்கு வெளிநாட்டிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. இதனை தவிர உள்நாட்டிலும் வித்தியாசமான அழுத்தங்கள் அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஊவா மாகாண சபைத்தேர்தலினை நல்ல உதாரணமாக கூறலாம்.

நாங்கள் எங்களது நடத்தையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்களது கேள்வியில் நியாயம் உண்டு நாங்கள் இந்த நாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமையைத்தான் கேட்கின்றோம்.

இந்த நாட்டின் உரிமைக்கு நாங்கள் உரித்துடையவர்கள். ஒரு நாட்டுக்குள் நாங்கள் இறைமையின்றி இருக்கக் கூடாது. இதற்கு எமது உரிமைக்கு ஏற்றபடி அரசியல் யாப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நடந்தால் தங்களது ஆதிக்கம் இல்லாம் போய்விடும் என்பதற்காவே பேரினவாதத்தினை தூண்டி விடுகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X