2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாரணர் கலைக்கூறு பயிற்சி

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


புதிய பாடத்திட்டத்தின் கீழ் சாரண தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைக் கூறு-02 பயிற்சிநெறி  மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் இப்பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக நடத்தப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பி. ஆனந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் கல்லூரியில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற இந்த பயிற்சி நெறி,  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 சாரணியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வதிவிடத்துடன் கூடியதாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பயிற்சி நெறியில் கொழும்பு சாரணிய தலைமையக உதவி ஆணையாளர் எஸ். சௌந்தரராஜன், தலைமையக பயிற்சி ஆணையாளர் சரத் கொடக்கந்த ஆராச்சி, முன்னாள் பயிற்சி ஆணையாளர்களான எம்.ஈ.எஸ்.ஜயசிங்க, சிறிசேன டி சில்வா.திருமதி ஜயக்கொடி, செல்வி சி.பெர்னாண்டோ ஆகியோர் பயிற்சி ஆலோசகர்களாக கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த சாரணர் பயிற்றுவிப்பாளர்களான எஸ்.அலோசியஸ், ஆர்.பாஸ்கர், ஏ.உதயகுமார், ரி.அலோசியஸ் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இந்நிகழ்வினை, மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் பி.ஆனந்தராஜா மற்றும் ஏ.புட்கரன் ஆகியோர் ஒழுக்கமைத்திருந்திருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X