2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விராது தேரரின் விஜயம் இனவாதத்தை தூண்டுவதாக அமையும்:ந.தே.மு

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்;.எஸ்.எம்.நூர்தீன்

அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெள்ளிக்கிழமை (26) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மியன்மார் நாட்டைச் சேர்ந்த அசின் விராது தேரர் வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராது தேரர் என்பவர் கடந்த காலங்களில் மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகள் மற்றும் அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்தவர்.

அது மாத்திரமின்றி வன்முறைகளையும் தீவிரவாத செயற்பாடுகளையும் தூண்டி இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளையும் மோதல்களையும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடத்திய ஒருவரே இந்த விராது தேரர்.

மனித நேயத்தையும், சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் விராது தேரரை ஒரு பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டுபவராகவும், மனித நேயத்துக்கும், இன நல்லுறவுக்கு அச்சுறுத்தலான ஒருவராகவுமே பார்க்கின்றனர் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X