2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகமும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளும்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறுவர் துஷ்பிரயோகமும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளும் எனும் தொனிப் பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (26) கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதனோடிணைந்த சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ.அப்கர், பொலிஸ் உதவி பரிசோதகர் கே.செல்வராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ. எல். எம். என். முபீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் உட்பட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுப் பிரதிநிதிகள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், திவினெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X