2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாகரை பிரதேசத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(26) மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

உலக தரிசன நிறுவன வடக்கு கிழக்கு வலய முகாமையாளர் ஏ.ஜே.ரமேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது வாகரை பிரதேச செயலகப்பிரிவில் கடமைபுரியும் அரச திணைக்கள அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பாராட்டப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது வாகரை பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம், பிரதேச சபை, கல்வித் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், விவசாய திணைக்களம்,  கமநல சேவைத் திணைக்களம், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் அதிகாரிகள் உலக தரிசன நிறுவனத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X