2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்முனை மற்றும் ஒல்லிக்குளம் மேற்கு கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சனிக்கிழமை(27) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்த வீடுகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்து பயணாளிகளிடம் கையளித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் சவூதி அரேபிய நாட்டு முக்கியஸ்தரின் நிதியுதவியுடன் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்முனை மற்றும் ஒல்லிக்குளம் மேற்கு கிராமங்களில் மீள்குடியேறிய 10 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

மேற்படி இரண்டு கிராமங்களிலும் 7 இலட்சம் ரூபாய் செலவில் தலா ஐந்து வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.  




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X