2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஊடகவியலாளர்களுக்கும் இளைஞர் சேவை மன்றத்துக்கும் உள்ள உறவு உயிரோட்டமானது'

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஊடகவியலாளர்களுக்கும் இளைஞர் சேவை மன்றத்துக்கும் இடையில், நீண்ட காலமாக உயிரோட்டமானதொரு உறவு நிலவி வருவதாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் தவராஜா கே. தவராஜா இன்று(28) தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் இங்கு தனது கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்;கும் ஊடவியலாளர்களுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்திருக்கின்றது.
அது போல இளைஞர் கழகங்களும் புத்துயிர் பெற்றிருக்கின்றன.

கடந்த ஆண்டு வேலைத்திட்டத்தின் படி மாவட்டத்தில், 338 இளைஞர் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாவட்ட உதவிப் பணிப்பாளர் நைறூஸின் அயராத முயற்சியால் இலக்கையும் தாண்டி 445 இளைஞர் கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அதன் ஆக்கபூர்வ பணிகள் காரணமாக, சிறப்பான கவனத்துக்கு உட்படுத்தப்பட்டது. தேசிய மட்டத்திலே மட்டக்களப்பு  மாவட்டம் மட்டும்தான் என்கின்ற வகையில் நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

இலங்கையில் மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பிலுள்ள பயிற்சி நிலையத்தில் மாத்திரம்தான் இதுவரையில் எந்தவித கட்டணங்களும் அறவிடப்படாமல் இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சியளிக்கப்ட்டு வருகின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிகளை ஊடவியலாளர்களும் ஊடகங்களும் மதிப்பளித்து அவற்றை ஊடகங்களில் வெளிக் கொண்டு வந்தமைக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கண்ணியமாக நன்றி செலுத்துகின்றது.

தேசிய உற்பத்தித் திறன் விருதுக்கு தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எமக்குத் தந்த ஆதரவுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

இளைஞர் சேவைகள் மன்றம், ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படுகின்ற விருதுக்கும் சிலிம் விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

இந்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் தவராஜா கே. தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான ஜே.ஆர். கலாராணி, நிஷாந்தி அருள்மொழி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம். சசிக்குமார் உட்பட ஊடகவியலாளர்களும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், செய்து முடிக்கப்பட்ட கடந்த கால வேலைத்திட்டங்கள் மேலும் அடுத்தாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X