2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறுகைத்தொழில் ஈடுபடும் திவிநெகும பயனாளிகளுக்கு தொழிலை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒருநாள் பயிற்சிமுகாம் மட்டக்களப்பு மாவட்ட திவிநெகம திணைக்கள உதவி ஆணையாளளர் பி. குணரெட்னம் தலைமையில் கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(27) இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பிரிவின் தலைவர் பஸ்வரா சேனக்கவின் வழிகாட்டலில் இப்பயிற்சி முகாம் இடம்பெற்றது.

சுற்றுலாத்துறையுடன் இணைந்த பாசிக்குடாவை அன்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த  சிறுகைத்தொழில் ஈடுபடும் திவிநெகும பயனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிய அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவின் முகாமையாளர் கே.எஸ்.சி. குணசிங்க, திவிநெகும திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் ஜே.எப். மனோகிதராஜ், மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும திணைக்கள திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி முகாமில் கோறளைப்பற்று, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த  சிறுகைத்தொழில் ஈடுபடும் திவிநெகும பயனாளிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X