2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாரணர் பாசறை

Gavitha   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நடாத்தும் வருடாந்த சாரணர் பாசறை, மட்.காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்ட சாரணர் பயிற்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட 11 பாடசாலைகளிலிருந்து 185 மாணவர்களும் 14 சாரணர் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு மாவட்ட சாரண உதவி ஆணையாளர் வ.சுப்பிரமணியம், சாரணர் குழு தலைவர் எஸ்.மேகவண்ணன் மற்றும் மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய பெண் சாரணர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் மாவட்ட சாரணர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரணர் பாசறையின் போது, பலபயிற்சிகளும் கற்பித்தல்களும் நடைபெற்றதுடன் தீப்பாசறை நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும்,  கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்து.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X