2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


அல்-கிம்மா நிறுவனத்தின் சுயதொழில் வழிகாட்டல் திட்டத்துக்கு அமைய, தூரப்பிரதேசத்திலிருந்து பாடசாலை செல்லும் மாணவர்களின் நலன்கருதியும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்காகவும் சனிக்கிழமை (27) துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாவலடி பிரதேசத்திலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடைவழியாக தியாவட்டுவான் பாடசாலைக்குச் செல்லும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மீராவோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுயதொழில் (மீன் வியாபாரம்) செய்பவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூனின் (ஸஹ்வி) வேண்டுகோளுக்கமைய நிறுவனத்தின் காரியாலயத்தில் வைத்து இத் துவிச்சக்கரவண்கள் வழங்கி வைக்கப்பட்டன.

துவிச்சக்கர வண்டிகளை அல் - கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர் குறித்த  பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X