2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மருங்கைக்கேணி வீதிக்கு வடிகான்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி 2ஆம்  மற்றும் 3ஆம் வட்டாரங்களை இணைக்கும் மருங்கைக்கேணி வீதிக்கு வடிகான் அமைப்பதற்கான  அடிக்கல்  ஞாயிற்றுக்கிழமை  (28) நாட்டிவைக்கப்பட்டது.

இவ்வீதிக்கு வடிகான் அமைக்க வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீரலியிடம் வேண்டுகோள் விடுத்தார். 

இது தொடர்பில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சரான எஸ்.உதுமாலெப்பையின் கவனத்துக்கு எம்.எஸ்.எஸ்.அமீரலி கொண்டுவந்தார்.

இந்த நிலையில்,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடடில் 72 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி,  ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X