2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திராய்மடுவில் மட்டு. மாவட்டச் செயலகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கான  புதிய கட்டடம் மட்டக்களப்பு, திராய்மடுவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதைக் கூறினார்.

இப்புதிய கட்டடம் 840 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதுடன், இதற்கான ஆரம்ப வேலைகள்  முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்களும் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் ஆராயப்பட்டன.

மேலும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித்திட்டங்கள்,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டிலான அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 14,261 திட்டங்களுக்காக 7,812 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,121 அபிவிருத்தித்திட்டங்கள் முடிவடைந்துள்ளது.

2013ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பொன். செல்வராசா வாதிட்டார்.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X