2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிங்களப் பொலிஸாருக்கு தமிழ்மொழி டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் சிங்களமொழி மூல பொலிஸாருக்கான தமிழ்மொழி டிப்ளோமா பாடநெறி  கல்லடி பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகியுள்ளது.

5 மாதங்களைக் கொண்ட இந்தப் பாடநெறியில் 156 சிங்களமொழி மூலமான பொலிஸார் கற்கின்றனர்.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஆரியரெட்ண, கல்லடி பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி எஸ்.அருளானந்தம் மற்றும் கல்லடி தமிழ்மொழி பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கே.பேரின்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்புதிய பிரிவு 9 அவது தொகுதியென்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X