2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ரீ.எம்.பாரிஸ்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி இன்று (29) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

குறிந்த பாடசாலையின் உயர்தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை மாணவர்கள் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நலன் கருதியே,  வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இருத்து தனி பெண்கள் பாடசாலையாக பிரித்தெடுக்கப்பட்டு  ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது. இவ்விரு பாடசாலைகளையும் ஒரு தடிப்பு சுவர் மாத்திரமே பிரித்து காட்டுகின்றன.

இருப்பினும் இரு பாடசாலைகளின் நிர்வாகமும் பாடசாலையின் அபிவிருத்தி குழுவும் இணைந்து இரு பாடசாலை மாணவர்களின் நலன் கருதியே வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் உயர்தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடத்தை ஆயிஷா மகளிர் மகா வித்தியால மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்நூர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.பிர்தௌஸ் கருத்து தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை 27ஆம் திகதி இந்த தீர்மானம் எம்மால் எடுக்கப்பட்டது. இது குறித்து மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை ஆராதனையின் போது விளக்கமளிக்க இருத்தேன். மாணவர்களின் அவசர புத்தி காரணமாக இதனை பாரிய பிரச்சினையாக காட்டி பாடசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் என அதிபர் தெரிவித்தார் .

இத்தீர்மானம் இரு பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் அபிவிருத்தி குழுவினால் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது.

உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு பாடசாலையின விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடத்தை வழங்கவில்லை. இதனை அறியாது மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டமை மன வேதனைனையை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் இது பற்றி குறிப்பிடுகையில்,

எமது பாடசாலையின் குறிந்த விஞ்ஞான ஆய்வு கூடம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, எங்களது கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறு செயற்பட்டோம் என என குறிப்பிட்டனர்.

ஆர்பாட்டத்தையடுத்து ஸ்தலத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸார், பாடசாலை அதிபர்,ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின்  பிரச்சினைக்கான தீர்வை பெற்று கொடுத்தனர்.

இதன்போது, பொது மக்களுக்கும் மாணவர்களுக்குமிடையில் ஏற்பட்ட சிறு கைகலப்பின் காரணமாக மாணவர் ஒருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X