2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு பிணை

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று (28) மீன்; விற்பனை நிலையமொன்றில் வைத்தே இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சோதனையின் போது இம் மூவரும் கேரளா கஞ்சா வைத்திருந்ததாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்தததுடன் இவர்களிடமிருந்து 30 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது இவர்களை தலா ஒருவருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவித்த பதில் நீதிபதி, இம் மூவரையும் 30.9.2014 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X