2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் மோதல்; மூவர் காயம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடையே இன்று திங்கட்கிழமை (29) மாலை ஏற்பட்ட மோதலில் கைதிகள் மூவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதி ஒருவர் வசமிருந்த பொருளொன்று காணாமற் போனது சம்பந்தமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் கைதிகளிடையே குழு மோதல் ஏற்பட்டதாக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் தற்போது நிலமைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்தாம் குறுக்கு கல்லடி மட்டக்களப்பைச் சேர்ந்த கே. புஸ்பராஜா (வயது 28), வாழைச்சேனை பறக்கத் வீதியைச் சேர்ந்த ஏ.எம். ஜெமீல் (வயது 22), சாகாமம் பொலிஸ் சாவடி வீதி, பொத்துவில் எனும் முகவரியைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ. றினோஸ் (வயது 22) ஆகியோரே காயமடைந்து போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளாகும் என்று பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X