2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உன்னத பணி மேற்கொள்கின்றது'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது இந்த நாட்டில் வாழ்கின்ற 13 தொடக்கம்  29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளை சகல துறைகளிலும் அதாவது விளையாட்டு, கல்வி, தொழிற்கல்வி, கலை கலாசாரம், பொருளாதாரம், அரசியல், மற்றும் சுயதொழில் போன்ற பல முக்கியமான துறைகளில் முன்னேற்றி, அவர்களை சிறந்த எதிர்கால தலைவர்களாக உருவாக்கும் உன்னதமான பணியை  மேற்கொண்டு வருகின்றது.'

இவ்வாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு  தொடர்பில்   இன்று செவ்வாய்க்கிழமை (30)  கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் படித்துவிட்டு தொழிலின்றியுள்ள இளைஞர், யுவதிகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் பிரபல தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் தொழிற்சந்தை வேலைத்திட்டத்தை வருடா வருடம் நடத்திவருகின்றோம்.

அந்த வகையில், இவ்வருடமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையால் இந்த தொழிற்சந்தையை கடந்த 23ஆம் திகதி நடத்தினோம்.

வேலையில்லாப் பிரச்சினை எமது நாட்டுக்கு  மட்டும் உரித்தானதல்ல. பலம் வாய்ந்த வல்லரசு நாடுகளைக் கூட ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஆரச துறைகளில் மாத்திரம் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள தற்கால இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்.

அதேபோன்று,  கிடைக்கின்ற தொழிலை திருப்தியாக மேற்கொள்ள வேண்டும். செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை தேட முற்படாமல் அதிலிருந்துகொண்டே தமது தகுதிக்குப் பொருத்தமான, மனதுக்கு பிடித்த வேலையை தற்கால இளைஞர், யுவதிகள் தேட வேண்டும்.

அதுபோல்,  தொழில் வழங்குநர்களும் எமது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அதிகமான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X