2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆய்வுகூட பரிசோதனை தினம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள  ஏறாவூர்- அலிகார் தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூட பரிசோதனை தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் தாவரப் பொருட்கண்காட்சியும் இன்று (30) நடைபெற்றது.

இடைநிலை, கல்விப்பொதுத்தரா தர சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்கேற்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏஎம் அஹமட் லெப்பை ஆரம்பித்து வைத்தார்.

கல்விப்பொதுத்தரா தர சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களைச் சேர்ந்த இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முந்நூற்றைம்பது மாணவர்கள் பாடத்திட்டத்துக்கமைவாக பதினைந்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை நடாத்தினர்.  

இப்பாடசாலை அதிபர் ஏ.எம். தௌபிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் மற்றும் விஞ்ஞானம் மற்றும் விவசாயம்  பாடத்துக்;கான உதவிக்கல்விப் பணிபாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் சமாதானக் கல்வி இணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இடைநிலை வகுப்பு நிகழ்வுகள் ஆசிரியை திருமதி எஸ்.ரீ.தௌபீக் உயர்தர வகுப்பு நிகழ்வுகள் ஆசிரியர் ஏ.எச்.ஏ. ஹபி ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X