2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சிறுவர்கள் தீர்மானம் எடுப்பதற்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

சிறுவர்கள் தீர்மானம் எடுப்பதற்கான  சந்தர்ப்பத்தை  வழங்க வேண்டுமென்பதுடன்,  இது அவர்களின் உரிமையாகுமென மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்தார்.

இவர்களின் இந்த உரிமை மறுக்கப்படுகின்றபோது அவர்களின்  சிந்தனைகள்; மறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

'பாசத்துடன் எம்மை பாதுகாருங்கள்' எனும் தலைப்பில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கொக்;கட்டிச்சோலையில் நேற்று புதன்கிழமை (01)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'தற்போது பலர்  வீடுகளில் பிள்ளைகளுக்கு தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பத்தை வழங்காமல் இருக்கின்றனர். குறிப்பாக பிள்ளைக்கு விருப்பமான உணவு என்ன? எந்த உடை தேவை? என்று கூட அவர்களிடம் கேட்டு தீர்மானம் எடுக்காமல் இருக்கின்றனர்.  இவ்வாறான நிலைமை  மாற வேண்டும்.

அது போல், தாயிடம் பிள்ளை இப்போது எங்கே? என்று கேட்டால், இங்கே எங்கோதான் நிற்பார்கள் என்று பதிலளிக்கின்றனர். காரணம் தாய்க்கு, பிள்ளை போகின்ற இடம் தெரியாது, இவ்வாறான நிலைமையும் மாறவேண்டும்.

பிள்ளை எங்கே? என்று கேட்டால் இப்போது பாடசாலையில் நிற்கின்றார். வகுப்பில் இருக்கின்றார் என்று கூற வேண்டும். நேரத்தைப் பார்த்து நேரத்துக்கு  ஏற்ற வகையில் அவர்கள் உள்ள இடத்தை சரியாக கூறவேண்டும். அதற்காக பிள்ளைகள் பற்றிய நேரசூசி பெற்றோர் மனதிலே ஓட வேண்டும்.

எமது பிரதேசத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டு செல்கின்ற பாரிய பிரச்சினையாக இருப்பது பெற்றோர், பிள்ளைகளுடனான பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். எமது பழமைகள் தொடர்ந்து நிலை நாட்டப்பட வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X