2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தங்கநகைகள் பறிமுதல்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலியும் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரினால் நேற்று வியாழக்கிழமை பறித்துச்செல்லப்பட்டுள்ளது என்று  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்கநகைகளே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டுள்ளது.

அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது தலைக்கவசம் அணிந்து வந்த இருவரால் குறித்த பெண்ணின் தங்க ஆபரணங்கள் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X