2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்வசதி பெற்றுக்கொடுப்பதற்கு உபகரணங்கள் கையளிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க, கோறளைப்பற்று பிரதேசசபையினூடாக மின் உபகரணங்கள் வியாழக்கிழமை (02) வழங்கி வைக்கப்பட்டன.

கிரான் பிரதேசம் பகுதியில் மின்வசதிகள் காணப்படாமையினால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்  வேண்டுகோளின் பேரில் மின் உபகரணங்கள் கிரான் பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி. ரவீந்திரன், ரமண மகரிஷி நிர்வாகத் தலைவர் செல்லத்துரை மற்றும் கிரான் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் வி. குமாரசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X