2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹஜ் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஷேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் அஹமட் லெவ்வை தெரிவித்தார்.  

எதிர்வரும் திங்கட்கிழமை (06) புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமையால், மறுதினம் மாணவர்களது வரவு குறைவடையுமென்பதை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடுமுறைக்கான பதில் பாடசாலை வகுப்புகள் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட வேண்டுமென பாடசாலை அதிபர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் ஏறாவூர் ,காத்தான்குடி மற்றும் கோரளைப்பற்று மேற்கு ஆகிய கோட்டங்களில் 74 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X