2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழந்தை மருத்துவப் பிரிவை கணனிமயப்படுத்தும் நிகழ்வு

George   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்
,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவை கணனிமயப்படுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(04) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை நல விடுதியில் நடைபெற்றது.

ஹட்ச் நிறுவனத்தின் பத்து இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இந்த கணனிமயப்படுத்தல் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸி நவரட்னராஜா, குழந்தை நல வைத்திய சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமதி அஞ்சலா அருள்பிரகாசம், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் கே.கருணாகரன், ஹட்ச் நிறுவனத்தின் தலைமையக சந்தைப்படுத்தல் சிரேஸ்ட முகாமையாளர் திருமதி றம்சீனா லை உட்பட வைத்தியர்கள், ஹட்ச் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X