2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவச கண் வெண்படல சத்திரசிகிச்சை

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வாகரை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சின் முதியோருக்கான தேசிய செயலகத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச கண் வெண்படல சத்திரசிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை (03) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இ;டம்பெற்றது.

கண்பார்வை பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இலவசமாக கண் வெண்படல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் வாகரை பிரதேச செயலகமும் கண் வில்லைகளை பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன. இத்தகைய சத்திர சிகிச்சையினை தனியார் மருத்துமனைகளில் மேற்கொள்ள 30 ஆயிரம் முதல் 40  ஆயரம் ரூபாய் வரை செலவிட வேண்டும். இங்கு முற்று முழுதாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு அதிகாரி.எஸ்.மதுசூதனன், சமூக சேவை அதிகாரி வி.செல்வநாயகம், வாகரை பிரதேச முதியோர் சம்மேளன தலைவர் ரி.ஜி.குருகுலசிங்கம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X