2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நலனோம்புத் திட்டங்கள் தொடர்ப்பில் விளக்கமளிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நலனோம்புத் திட்டங்கள் பற்றி  சனிக்கிழமை (04) மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராம மக்களுக்குத் தெளிவுப்படுத்தும் நிகழ்வு சமூகசேவை உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் தலைமையில் நடைபெற்றது.

சுவிஸ் கிராமத்திலுள்ள ஹெல்பேஜ் சமூக ஒன்று கூடல் மண்டபத்தில், கிராம மகளிர் அமைப்பின் தலைவி எஸ். பூங்கோதையின் ஏற்பாட்டில் இவ்விளக்கமளிப்பு கூட்டம் நடைபெற்றது.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் நலன்புரிச் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம், மகளிர் சங்கம், கோயில் நிருவாகம், உள்ளூர் கிராம மட்ட சமூக சேவைத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

இதன்போது மாவட்ட சமூக சேவை அதிகாரி எஸ். அருள்மொழி, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் ஆகியோர் சமூக சேவைத் திணைக்களத்தினால் பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுகூலங்களைப் பற்றி விளக்கமளித்தனர்.

சமீபத்தில் சமூக சேவைத் திணைக்களத்தினால் வலது குறைந்த 18 வயதிற்குட்பட்டவர்களுக்காக வழங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் விஷேட அணுகும் வசதிக்குரிய 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்டு பழுதடைந்துள்ள முச்சக்கர சைக்கிள் வண்டிகளைத் திருத்தியமைப்பதற்கான கொடுப்பனவு என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டதாக சமூகசேவை உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திராய்மடு  இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கிராம மக்களுக்கான சமூக நலனோம்புத் திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு தாங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X