2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு விழா

Gavitha   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட். குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா அதிபர் வ.கனகரெத்தினம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05) வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுவரை இப்பாடசாலையில் கல்வி கற்று, கல்வி, விளையாட்டு, தமிழ் தினப்போட்டி, மற்றும் ஏனைய போட்டிகளில் பாடசாலை மட்டம், வலயமட்டம், மாவட்ட மட்டம், தேசியமட்டம், என திறமைகளை வெளிப்படுத்திய 450 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன்போது பதக்கங்களும் கேடையங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் எல்.லவநாதன், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பரிசளிப்பு விழா தொடர்பான 'வெட்டாப்பு' என்ற நூலும் வெளியிடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X