2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி கோப்பாவெளியில் இன்று (06) ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியபுல்லுமலையிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதனாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹிரோஸ் நுவாஞ்ஜித் (வயது 29), நாமல் திஸாநாயக்க (வயது 32) மற்றும் தாரங்க வீரசிங்ஹ (வயது 35) ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இவர்கள் உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கரடியனாறு வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன.

டிப்பர் ரக வாகனத்துக்குள் அகப்பட்ட காரிலிருந்து காயமடைந்தவர்களை மீட்டெடுப்பதற்காக சுமார் ஒரு மணிநேரம் சென்றதாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றிருந்த மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(படங்கள்: எஸ். பாக்கியநாதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X