2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புகைப்படக் கண்காட்சி, வணிகக் கருத்தரங்குக்கான நடவடிக்கை

Gavitha   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் நன்மை கருதி புகைப்படக் கண்காட்சி மற்றும் வணிகக் கருத்தரங்கு என்பன எதிர்வரும் சனிக்கிழமை (11) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆகிய தினங்களில்,  மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வைப் பற்றி விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு புதன்கிழமை (08) வங்கியில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

வாடிக்கையாளரின் நலன் கருதி கிழக்கின் எழுச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் ஜி.ஐ. இசட் உடன் இணைந்து நடத்தவுள்ளதாக வங்கியின் முகாமையாளர் அங்ஜேலா பிலிப் தெரிவித்தார்.

கண்காட்சியில், வாடிக்கையாளர்களின் முன்னேற்றங்களின் செயற்றிட்டங்கள், புகைப்படங்கள் மூலம் காண்பிக்கப்படவுள்ளதாக முகாமையாளர் தெரிவித்தார்.

ஜி.ஐ.இசட் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் திட்ட அதிகாரி அசங்க வர்ணகுலசூரிய, ஜேர்மனிய சர்வதேச நிறுவகத்தின் புகைப்படப்பிடிப்பாளர் எஸ். ரால்ஸ், நேசன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் உதவி முகாமையாளர் சேன் லொரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X