2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாதசாரிக் கடவையில் விபத்து: மாணவன் படுகாயம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் வியாழக்கிழமை(9)   இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வித்தியாலயத்தில் முதலா மாண்டில் கற்கும் சந்திவெளி ஜின்னாஹ் வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜா ஜெயநாதன் (வயது 6) என்ற மாணவனே விபத்தில் படுயாகமடைந்துள்ளார்.

இம்மாணவன், பாடசாலை முன்னாலுள்ள பாதசாரிக் கடவையை கடக்கும் போது  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியுள்ளது.
உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X