2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அனுபவப்பகிர்வு ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல் 


'ஆண்களை வலுவூட்டுவதன் மூலம் அவர்களை இணைத்துக்கொண்டு பால்நிலை சமத்துவத்தை மீளவரையறுத்தல்' எனும் செயற்றிட்டத்தின் இறுதி நிகழ்வாக அனுபவப்பகிர்வு ஒன்றுகூடல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கெயர் சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.ரங்கநாதன், கெயர் சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக்கான உதவிப்பணி;ப்பாளர் அஸிக்கா குணவர்த்தன, திட்ட முகாமையாளர் திருமதி எஸ்.ஜெயந்தி, திட்ட இணைப்பாளர்களான கீரஸ்னகாந், எம்.ஜே.எம்.இர்பான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இவ்வேலைத்திட்டம் தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது.

இவ்வேலைத்திட்டம் கடந்த 04 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி,  ஏறாவூர்ப்பற்று, வெல்லாவெளி ஆகிய 03 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள  17 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு  கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்து ஆண்களை வலுவூட்டுவதன் மூலம் வறுமையை குறைக்கமுடியும். அத்தோடு, எண்ணத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X