2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின்; கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரி, கல்குடா கலைமகள் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்  ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்தார்.

இதன்போது, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து  எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியும்  பாடசாலைகளில் நிலவும் குறைநிறைகள் பற்றியும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்துதருவதாக அவர் கூறினார்.

இந்த விஜயத்தன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்களும் பரிசுப் பொருட்களும் அவர் வழங்கி கௌரவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X