2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புனரமைப்புப்பணி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையானது ஜெய்க்கா திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, கடந்த 2 வருடங்களாக கட்டட  நிர்மாணப்பணி இடம்பெறுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை  அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

'பல வருடங்களாக இவ்வைத்தியசாலையில் கட்டட வசதிகளோ, வேறு எந்தவிதமான அபிவிருத்திகளோ தேவையான அளவுக்கு மேற்கொள்ளப்படாது மிகவும் பின்தங்கிக் காணப்பட்டது. 

ஜப்பான் நாட்டின் உதவியில் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 430 மில்லியன் ரூபாய் செலவில் கட்டட நிர்மாணப்பணி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வைத்தியசாலைக்குரிய கட்டட வசதி மாத்திரமல்லாமல், வைத்திய உபகரணங்களும்  இத்திட்டத்தினூடாக கொண்டு வரப்படவுள்ளன. இக்கட்டடத்தொகுதியில் அவசர சிகிச்சைப்பிரிவு, சத்திரசிகிச்சைப்பிரிவு, நோயளர் தங்குமிடம், கதிரியக்கப்பிரிவு, ஆய்வுகூடம், பயிற்சிக்கூடம், வெளிநோயாளர் பிரிவு, சகலவிதமான கிளினிக் நிலையங்களும்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தை மையப்படுத்தி வாழ்கின்ற 150,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படுவது ஒரு வரப்பிரசாதமாகக் காணப்படுகன்றது. மக்களின் சுகாதார தேவைகளை ஈடேற்றிக்கொள்வதற்காக நாங்கள் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு, கட்டடங்கள் குறைபாடாகக் காணப்பட்டது, அக்கட்டட வசதிகள் தற்போது பூர்த்தியாக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது ஆளணிப்பற்றாக்குறை இவ்வைத்தியசாலையில் நிலவி வருகின்றது.

இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படும் பட்சத்தில் இன்னும் மிகச் சிறந்த சேவையை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆற்றலாம் என்பதில் எனக்கு மிகுந்த நம்;பிக்கையுள்ளது' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X