2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (11) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டன.

இந்த வருடத்துக்கான திட்டத்தை மிகவிரைவாக நிறைவு செய்து அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் செலவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் 2,122 அபிவிருத்தி திட்டங்களில் 8,56 திட்டங்கள் இதுவரை முடிவடைந்துள்ளன.

இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1347.27 மில்லியன் ரூபாவில் 572.08 மில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்; தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதா அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரமுhன எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மொண்டி ரணதுங்க, முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உட்பட திணைக்கள தலைவர்கள், பொருளாதார அpபவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X